Monday, July 13, 2009

முருகையன் அஞ்சலிக் கூட்டம்


ஈழத்தின் இலக்கியப் பரப்பில் 1950 முதல் தன் பங்களிப்பைத் தொடர்ச்சியாகச் செய்துவந்த மூத்த கவிஞர் அ. முருகையன் யூன் 27, 2009ல் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவின் பின்னர் அவரது நினைவுகளை பரிமாறும் நோக்குடன் “தேடகம்” குழுவினரால் யூலை 11, 2009 அன்று கனடாவில் டொரண்டோவில் உள்ள “எவரெஸ்ட் மண்டபத்தில் “ ஒரு அஞ்சலி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது


நிகழ்வுகளை ஜெயகரன் தொகுத்து வழங்க, எழுத்தாளர் தேவகாந்தன், காலம் செல்வம், இளங்கோ, மெலிஞ்சி முத்தன், என். கே மகாலிங்கம், மலையன்பன், கவிஞர் வி. கந்தவனம் போன்றோர் உரையாற்றினர். சிறப்புரையை பேராசிரியர் சிவசேகரம் நிகழ்த்தினார்.

திரு. முருகையன் அவர்களுடன் பணியாற்றியாற்றிய ஒருவர் கலந்துகொண்டு அவர் பற்றி ஆற்றிய உரையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களின் உரை-ஒலி தொகுப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் சிவசேகரம்


Sivasekaram -



காலம் செல்வம்


Kaalam Selvam -





முருகையன் பற்றிய “கானா பிரபாவின்” பதிவு

1 comment:

கானா பிரபா said...

வணக்கம்

கவிஞர் முருகையனுக்கு நடக்கும் முதல் அஞ்சலிக்கூட்டம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். உண்மையில் உங்கள் செயற்பாடு சிறப்பாகவும் காலம் உணர்ந்தும் அமைந்திருக்கின்றது. ஒலித்தொகுப்புக்களை பகிர்வது உண்மையில் நல்லதொரு விடயம்.